யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடாத்திய தாக்குதல்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி கண்டனம் தெரிவிக்கின்றது

on .

யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவமும் காவல்த்துறையும் நடாத்திய தாக்குதல்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி கண்டனம் தெரிவிக்கின்றது.

எம் இனத்திற்காக களமாடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களை நினைவு கூற தடையாக யாழ் பல்கலக்கழகத்தில் இரானுவம் அத்து மீறி நுழைந்து எம் சகோதரிகள் சகோதரர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தினார்கள்.

இந்த இனவெறி தாக்குதல் நம் மாவீரரை நினைவு கூறுவதைத் தடுத்து எம் தேசிய அடையாளங்கள் அனைத்தையும் அளிக்கும் முயற்ச்சியில் இரானுவம் ஈடுபடுவது தெளிவாகத்தேரிகின்றது.

இந்த கடும் அடக்குமுறைக்கு எதிராக 28.11.2012 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இரானுவமும் காவல்த்துரையும் இந்த அமைதி போராட்டத்தை கொடும் வன்முறையால் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலால் 20 மாணவர்கள் காயம் அடைந்தார்கள்.

தமிழ் மக்கள் தம் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுத்தும் இந்த அடக்குமுறை தாக்குதல்களை தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி மிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தாக்குதல்கள் சிங்கள அரசாங்கத்தின் இன அழிப்பு திட்டத்தின் செயல்கள் என்று நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எம் எதிர்கால சமுதாயமாக இருக்கும் எம் தமிழ் மாணவர்கள் எம் தேசியத்தை விட்டுகொடுக்காமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குத் துணையாக நாம் தமிழ் இளையோர் அமைப்பு இருப்போம் என்று உறுதி எடுக்கின்றோம்.  புலத்தில் வாழும் எம் சமுதயாமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

எம்மாதரவை இந்தக் கண்டன அறிக்கையோடு மட்டும் நிக்காமல் செயலிலும் காட்ட வேண்டும். 

எம் இளையோர்களுக்கு துணையாக எம் தேசிய பாதையில் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். பிரிவுகள் இல்லாமல் நாம் ஒன்றிணைந்து எம் தேசிய விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் எம் மாவீரர்கள் கனவுகள் நனவாக்குவத்ற்காகவும் நாம் தொடர்ந்தும் அயராமல் உழைக்க வேண்டும். எம் தேசியத்தை நோக்கிய பயணத்தில் நீங்கள் அனைவரும் தாயகத்தில் வாழும் எம் இளைய சாமுதயத்திற்கும் புலத்தில் வாழும் எம் இளையோர்களுக்கும் துணையாக நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி